உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கப்பல் கட்டும் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு 20 கிராம மக்கள் போராட்டம் நடத்த முடிவு

கப்பல் கட்டும் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு 20 கிராம மக்கள் போராட்டம் நடத்த முடிவு

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே கப்பல் கட்டும் தொழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப் போவதாக 20 கிராம நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.பரங்கிப்பேட்டை அடுத்த வேளங்கிராயன்பேட்டை கிராமத்தில் தனியார் கப்பல் கட்டும் தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. அதற்கான நிலங்கள் வாங்கப்பட்டு வேலி அமைக்கும் நடந்து முடிந்துள்ளது. கப்பல் கட்டும் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் எதிர்ப்பை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த 14ம் தேதி கலெக்டர் அமுதவல்லி தலைமையில் நடந்த கருத்து கேட்புக் கூட்டத்தில் பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., உட்பட அனைவரும் கப்பல் கட்டும் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.இந்நிலையில் நேற்று வேளங்கிராயன்பேட்டை கிராமத்தில் புதுக்குப்பம், வில்லியநல்லூர், பஞ்சங்குப்பம் உட்பட 20 கிராம நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஏழுமலை தலைமையில் நடந்தது. 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில், கப்பல் கட்டும் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பேராட்டம் நடத்துவது. தொழிற்சாலையால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கலைக் குழுவினரை அழைத்து வந்து கிராமம் தோறும் பிரசாரம் செய்வது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை