உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஐந்து ஆண்டுகளாக குடிநீர் வசதி இல்லை: காலிக்குடங்களுடன் கலெக்டரிடம் புகார்

ஐந்து ஆண்டுகளாக குடிநீர் வசதி இல்லை: காலிக்குடங்களுடன் கலெக்டரிடம் புகார்

கடலூர் : மழை நீர் சேகரிப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை பார்வையிடச் சென்ற கலெக்டரிடம் காலிக்குடங்களுடன் பெண்கள் ‹ழ்ந்து 5 ஆண்டுகளாக குடிநீர் வசதி இல்லை என முறையிட்டனர்.மத்திய அரசின் மழைநீர் சேகரிப்பு திட்டம் 2007 - 08ம் ஆண்டில் பாசன கிணறுகளில் மழை நீரை சேமிப்பு திட்ட கட்டமைப்பை ஏற்படுத்த மாவட்டத்தில் 11 ஆயிரத்து 993 விவசாயிகள் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டு 4.63 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டது.இப்பணிகளை கலெக்டர் அமுதவல்லி கோரணப்பட்டில் ஆய்வு செய்த பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், 'மாவட்டத்தில் 564 பேர் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைத்துள்ளனர். கோரணப்பட்டில் 360 விவசாயிகளுக்கு 42 பேர் மட்டுமே மழைநீர் கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு விவசாயிகளும் எதிர்கால சந்ததிகளை கருத்தில் கொண்டு மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்க வேண்டும்' என்றார்.பெண்கள் புகார்: கோ.சத்திரம் கிராமத்தில் ஆய்வு செய்யச் சென்றபோது கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் சென்று, கடந்த 5 ஆண்டுகளாக குடிநீர் வினியோகம் இல்லை.இதனால் அருகில் உள்ள விவசாய நிலத்தில் உள்ள போர்களில் தண்ணீர் எடுத்து வரவேண்டிய நிலை உள்ளதாக புகார் கூறினர்.உடன் அருகில் இருந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி தலைவரிடம் விசாரணை நடத்தி உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ