உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உரம் தட்டுப்பாட்டால் விவசாயிகள் திண்டாட்டம்

உரம் தட்டுப்பாட்டால் விவசாயிகள் திண்டாட்டம்

கடலூர் : முன்பருவ சம்பா நெல் பயிருக்கு உரம் கிடைக்காமல் விவசாயிகள் திண்டாடி வருகின்றனர்.நிலத்தடி நீரை பயன்படுத்தி விருத்தாசலம், சிதம்பரம், கடலூர் ஒன்றியங்களில் நெல் பயிர் நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது கதிர் வரும் தருவாயில் உள்ள பயிருக்கு மணிச்சத்துள்ள பொட்டாஷ், டி.ஏ.பி., உரங்கள் தேவைப்படுகிறது.தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வந்த உரம் தற்போது திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.இந்த தட்டுப்பாடு காரணமாக ஸ்டாக் வைத்துள்ள சில கடைக்காரர்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.இன்னும் பயிருக்குத் தேவையான உரம் போடமுடியாமல் பயிருக்கு சம்மந்தமில்லாத உரத்தை பயன்படுத்தும் நிலை உள்ளது.இதனால் விவசாயிகள் புதுச்சேரியில் இருந்து உரத்தை வாங்கிச்சென்று உபயோகிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ