உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மணல் திருட்டைத் தடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

மணல் திருட்டைத் தடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் தொடர்ந்து மணல் திருட்டு நடப்பதை தடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் அரசு மணல் குவாரிகள் போதுமான அளவு இல்லாததால் மணல் திருட்டு அதிகளவு நடக்கிறது. நேற்று முன்தினம் காலை கோண்டூர் சவுக்கு தோப்பில் மாட்டு வண்டி மூலம் மணல் எடுத்து வந்து குவித்து திருட்டுத் தனமாக லாரியில் ஏற்றி வந்த போது லாரியை போலீசார் பிடித்தனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நெல்லிக்குப்பம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது வேகமாக வந்த லாரியை நிறுத்தினர். அதில் அனுமதியின்றி மணல் கடத்திச் செல்வது தெரிய வந்தது. உடன் போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். நெல்லிக்குப்பம் பகுதியில் தொடர்ந்து நடைபெறும் மணல் திருட்டை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி