உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தடகளப்போட்டி பரிசளிப்பு விழா

தடகளப்போட்டி பரிசளிப்பு விழா

நெய்வேலி : நெய்வேலியில் குறிஞ்சிப்பாடி குறுவட்ட தடகளப் போட்டி பரிசளிப்பு விழா நடந்தது. குறிஞ்சிப்பாடி குறுவட்ட தடகளப் போட்டிகள் நெய்வேலி ஜவகர் மெட்ரிக் பள்ளி சார்பில் நடந்தது. டவுன்ஷிப் பிளாக் 10ல் உள்ள பாரதி விளையாட்டரங்கில் கடந்த 23ம் தேதி தொடங்கிய இப் போட்டி 30ம் தேதி முடிந்தது. கைப்பந்து, கபடி, கோ கோ, போன்ற அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் ராமச்சந்திரன் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். போட்டிக்கான ஏற்பாடுகளை ஜவகர் பள்ளி என்.எஸ்.எஸ்., அலுவலர் பாலமுருகன், உடற் கல்வி ஆசிரியர்கள் மற்றும் என்.எஸ். எஸ்., மாணவர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ