உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உள்ளாட்சி தேர்தலில் நூற்றுக்கு நூறு வெற்றி பெற வேண்டும்: செம்மலை எம்.பி.,

உள்ளாட்சி தேர்தலில் நூற்றுக்கு நூறு வெற்றி பெற வேண்டும்: செம்மலை எம்.பி.,

கடலூர் : உள்ளாட்சித்தேர்தலில் நூற்றுக்கு நூறு இடங்களில் அ.தி.மு.க., வெற்றிபெற வேண்டும் என அ.தி.மு.க., அமைப்புச் செயலர் எம்.பி., செம்லை பேசினார். கடலூரில் உள்ளாட்சி தேர்தல் குறித்த அ.தி. மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் செம்மலை எம்.பி., பேசியதாவது: கடந்த சட்டசபை தேர்தலில் துரியோதனாதிபதிகளை வெற்றி கொண்ட பஞ்சபாண்டவர்கள் போல் கடலூர் மாவட்டத்தில் 5 தொகுதிகளில் அ.தி.மு.க,.,வெற்றி பெற்றது. இதற்காக உழைத்த தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சட்டசபை தேர்தலின் வெற்றி உங்கள் உழைப்பால் கிடைத்த வெற்றி. கடந்த தேர்தலின் போது , தி.மு.க., காங்., வி.சி., என வலுவான கூட்டணி என பலரும் கூறினர். ஆனால் நாம் நூற்றுக்கு நூறு வெற்றி பெற்றோம். இதே போன்று உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெறவேண்டும். எனவே அனைத்து இடங்களிலும் நாம் வெற்றி பெறவேண்டும். முதல்வர் அறிவிக்கும் வேட்பாளர்களை நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு, அரசியலில் பல்வேறு துறைகளிலும் பதவிகள் காத்திருக்கின்றது என பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை