உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பஞ்சரானது கடலூர் புதுப்பாளையம் மெயின் ரோடு மெத்தனத்தில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்

பஞ்சரானது கடலூர் புதுப்பாளையம் மெயின் ரோடு மெத்தனத்தில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்

கடலூர் : கடலூர் புதுப்பாளையம் மெயின் ரோட்டில் பாதாள சாக்கடைப்பணி முடிவடைந்து ஓராண்டாகியும் இதுவரை நெடுஞ்சாலைத்துறை சாலை போடாமல் காலம் தாழ்த்தி வருகிறது. கடலூர் நகரில் பாதாள சாக்கடை திட்டம் கடந்த 2007ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி துவங்கியது. 2008 டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டிய பணி அதிகாரிகளின் அலட்சியத்தால் நாலரை ஆண்டுகளாகியும் இதுவரை முடிந்தபாடில்லை. ஏற்கனவே சிறு சிறு சாலைகளில் எல்லாம் ஆளிறங்கும் குழிகள், பைப்பு லைன்கள் போடப்பட்டுவிட்டன. பெரும்பாலான சாலைகளில் சாலை பணிகள் நிறைவடைந்து விட்டன. ஆனால் தற்போதுதான் கடலூரின் முக்கிய பகுதியான நேதாஜி, பாரதி, சிதம்பரம் சாலை போன்ற முக்கிய சாலைகளில் பணி துவங்கப்பட்டுள் ளது. இந்தச் சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள் இதுவரை இல்லாத சிரமங்களை விட தற்போது கூடுதலாக அனுபவித்து வருகின்றனர். உதாரணமாக கடலூரின் இதய பகுதியாக உள்ள புதுப்பாளையம் மெயின்ரோட்டில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தோண்டிப்போட்ட சாலை அலங்கோலமாக கிடக்கிறது. தற்போது பெய்து வரும் மழையால் வாகனங்கள் செல்ல முடியாமல் சிக்கி தவிக்கின்றனர். அப்போது ஏற்படும் டிராஃபிக் ஜாமால் பொது மக்கள், பள்ளி மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீர் வடிகால் வாரியம் பாதாள சாக்கடைத்திட்ட பணிகளை முடித்து நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைத்து விட்டனர். ஆனால் ஒரு ஆண்டு ஆகியும் இதுவரை நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் சாலை போடாமல் கண்டு கொள்ளாமல் உள்ளனர். மழைக் காலத்திற்குள்ளாவது சாலை போடும் பணியை நெடுஞ்சாலை பணியை தொடங்குவார்களா என மக்கள் மத்தியில் சந்தேகம் வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ