உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குடிநீர் தொட்டியை இயக்க நடவடிக்கை பொதுமக்கள் கலெக்டருக்கு மனு

குடிநீர் தொட்டியை இயக்க நடவடிக்கை பொதுமக்கள் கலெக்டருக்கு மனு

பண்ருட்டி : குடிநீர் மேல்நிலை தேக்கத் தொட்டியை சீராக பராமரிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் கலெக்டருக்கு மனு அனுப்பியுள்ளனர். மனு விவரம்: கடலூர் ஒன்றியம் சி.என்.பாளையம் ஊராட்சி புளியந்தோப்பு மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியின் ஆபரேட்டராக பணிபுரியும் ரஹமத்துல்லாவிற்கு 63 வயதாகிறது. இவர் கடந்த சில ஆண்டுகளாக குடும்பத்துடன் கும்பகோணத்தில் வசித்து வருகிறார். இதனால் ஊராட்சி குடிநீர் மேல்நிலை தொட்டியை பலர் இயக்கி வருகின்றனர். இதனால் அடிக்கடி மோட்டார் பழுதாகி வருகிறது. இவருக்கு வயது முதிர்வு காரணமாக பணியில் சில காலம் இருந்தாலும் தொட்டியை சுத்தம் செய்ய முடியவில்லை. அடிக்கடி பழுது, தொட்டி பராமரிப்பின்றி உள்ளதால் பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே, புதிய ஆபரேட்டர் நியமிக்க கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ