உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மக்கள் தொகைக் கல்வி தொடர்பான நடித்தல் போட்டி

மக்கள் தொகைக் கல்வி தொடர்பான நடித்தல் போட்டி

குறிஞ்சிப்பாடி : வடலூரில் மக்கள் தொகைக் கல்வி தொடர்பான மாவட்ட அளவிலான நடித்தல் போட்டி நடந்தது.கடலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் மக்கள் தொகைக் கல்வி தொடர்பான மாவட்ட அளவிலான நடித்தல் போட்டி நடந்தது. போட்டியில் மாவட்டத்தில் இருந்து பதிமூன்று ஒன்றியம், வட்டார அளவில் நடந்த போட்டியில் முதல் பரிசு பெற்ற பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இளம் வயதில் திருமணம், ஆண் பெண் சமம், போதைப் பொருள்களுக்கு அடிமையாதல், எச்.ஜ.வி., போன்ற தலைப்புகளில் போட்டி நடந்தது. இதில் மாவட்ட அளவில் பண்ருட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த காடாம்புலியூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்று, மாநில அளவில் நடக்கும் போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பயிற்சி நிறுவன முதல்வர் சுப்பிரமணிய பிள்ளை பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கினார். முதுநிலை விரிவுரையாளர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ