உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இலவச கண் சிகிச்சை முகாம்

இலவச கண் சிகிச்சை முகாம்

கடலூர் : கடலூர் அழகப்பா ஜூவல்லரி குழுமத்தின் ஸ்தாபகர் நினைவு தினத்தையொட்டி, மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், பாரதி அரிமா சங்கம், சுப்ரீம் அரிமா சங்கம் ஆகியவை சார்பில் கடலூரில் வரும் 11ம் தேதி இலவச கண்சிகிச்சை முகாம் நடக்கிறது. கடலூர் திருப்பாதிரிப்புலியூர், பாடலீஸ்வரர் மேல்நிலைப் பள்ளியில் வரும் 11ம் தேதி காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை நடக்கவுள்ள இலவச கண் சிகிச்சை முகாமை கலெக்டர் அமுதவல்லி தலைமையில், மாநில திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் சம்பத் துவக்கி வைக்கிறார். முகாமில் மதுரை மற்றும் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் குழு சிகிச்சை அளிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்