உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., பொதுக்கூட்டம்

கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., பொதுக்கூட்டம்

சிதம்பரம்: கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் கட்சியின் துவக்க விழா பொதுக்கூட்டம் சிதம்பரத்தில் நடந்தது.கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் குமார் தலைமை தாங்கினார். ஜெ., பேரவை துணை செயலாளர் பாலமுருகன், முன்னாள் மாவட்ட செயலாளர் மாரிமுத்து, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் திருமாறன், மாவட்ட துணை செயலா ளர் செல்வம், ஒன்றிய அவைத் தலைவர் பேராசிரியர் ரங்கசாமி முன்னிலை வகித்தனர். செந்தில்குமார் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் தோப்பு சுந்தர் கூட்டத்தை துவக்கி வைத்தார்.கூட்டத்தில் கடலுார் கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., தலைமை கழக பேச்சாளர்கள் சுந்தரபாண்டியன், காசிநாதன் பாரதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் தேன்மொழி, நகர செயலாளர்கள் தமிழரசன், பொதுக்குழு உறுப்பினர் சிங்காரவேலு, ஒன்றிய செயலாளர்கள் சுந்தரமூர்த்தி, அசோகன், கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் வசந்த், சிதம்பரம் நகரமன்ற கவுன்சிலர் சித்ரா, மாவட்ட தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் சுவாமிநாதன், இளைஞர் அணி செயலாளர் செழியன், உள்ளிட பலர் பங்கேற்றார்கள்.சண்முகம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ