தேசிய சாப்ட் டென்னிஸ் போட்டி கடலுார் மாணவிகள் தேர்வு
கடலுார்:கடலுாரை சேர்ந்த இரண்டு மாணவிகள், தேசிய அளவிலான சாப்ட் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர். இந்திய பள்ளிகள் விளையாட்டுக்குழுமம் நடத்தும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதியான மாணவர்களை தேர்வு செய்ய, தமிழகத்தில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் பயிலும் மாணவர்களுக்கான தெரிவுப்போட்டிகள் வேலுார் மாவட்டத்தில் நடந்தது. இதில் கடலுார் மாவட்டத்திலிருந்து சாப்ட் டென்னிஸ் போட்டியில் 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் மாணவி பூஜாஸ்ரீ, 17வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் மாணவி தமிழ்விழி ஆகியோர் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர். தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற மாணவிகள் மற்றும் பயிற்சியாளர் அப்பாதுரையை, கடலுார் மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார், கடலுார் மாவட்ட சாப்ட் டென்னிஸ் அசோசியேஷன் தலைவர் கிருஷ்ணசாரதி, செயலாளர் சித்ராஅப்பாதுரை, பொருளாளர் ஜெயப்பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள், மாணவிகளின் பெற்றோர் பாராட்டினர்.