உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெல்லிக்குப்பம் நகர மன்றக் கூட்டம் 15 நிமிடத்தில் 70 தீர்மானங்கள் நிறைவேற்றம்

நெல்லிக்குப்பம் நகர மன்றக் கூட்டம் 15 நிமிடத்தில் 70 தீர்மானங்கள் நிறைவேற்றம்

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகர மன்றக் கூட்டத்தில் 15 நிமிடத்தில் எந்தவித விவாதமும் இன்றி 70 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.நெல்லிக்குப்பம் நகரமன்ற கூட்டம் சேர்மன் கெய்க்வாட் பாபு தலைமையில் நடந்தது. கமிஷனர் புவனேஸ்வரி, மேலாளர் சவுந்திரராஜன் மற்றும் 17 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.கூட்டம் துவங்கியதும், இலங்கை தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்.இலங்கை நாட்டிற்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வருக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென அ.தி.மு.க., தனசேகரனும், சமச்சீர் கல்வியை ரத்து செய்த முதல்வர் ஜெ.,வை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தி.மு.க., விஜயகுமாரும் கூறினர்.அப்போது சமச்சீர் கல்வி வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்ற சேர்மன், மன்றத்தில் கொண்டு வந்த 70 தீர்மானங்களும் நிறைவேறியதாக அறிவித்ததும் 15 நிமிடங்களில் கூட்டம் முடிந்தது.பின்னர், 60 லட்சம் ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் புதிய நகராட்சி அலுவலகத்தை சேர்மன் மற்றும் கவுன்சிலர்கள் சேர்ந்து பார்வையிட்டனர்.அப்போது கவுன்சிலர்கள், கட்டுமான பணியை விரைந்து முடித்து தங்களது பதவி காலம் முடிவதற்குள் திறந்து ஒரு கூட்டமாவது நடத்த வேண்டும் என சேர்மனிடம் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்