உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாநில செஸ் போட்டி பண்ருட்டியில் துவக்கம்

மாநில செஸ் போட்டி பண்ருட்டியில் துவக்கம்

பண்ருட்டி : பண்ருட்டி கிங் செஸ் அகாடமி சார்பில் சிறுவர், சிறுமியருக்கான மாநில அளவிலான ஓப்பன் செஸ் போட்டி நாளை(6ம் தேதி) துவங்குகிறது.பண்ருட்டி கிங் செஸ் அகாடமி நடத்தும் மாநில அளவிலான ஓப்பன் செஸ் போட்டி மற்றும் வயது பிரிவில் 7, 9, 11, 13, 15 வயது சிறுவர், சிறுமியர்களுக்கான போட்டி சுபாஷிணி திருமண மண்டபத்தில் நாளை 6ம் தேதி துவங்கி 7ம் தேதி வரை இரு நாட்கள் நடக்கிறது.போட்டியில் முதல் 20 இடங்களை பிடிக்கும் நபர்களுக்கு பரிசுகளும், சிறுவர், சிறுமியர் பிரிவில் முதல் 10 இடங்களை பிடிக்கும் நபர்களுக்கு பரிசு கோப்பை மற்றும் சான்றும் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்