உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திட்டக்குடியில் பா.ஜ., கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

திட்டக்குடியில் பா.ஜ., கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

திட்டக்குடி : கடலூர் மாவட்ட பா.ஜ., சார்பில் காங்., அரசின் ஊழலைக் கண்டித்து திட்டக்குடியில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. திட்டக்குடி பஸ் நிலையத்தில் மாவட்ட, ஒன்றிய பா.ஜ., சார்பில் மத்திய அரசின் ஊழல் ஆட்சியைக் கண்டித்தும், வெளிநாட்டிலுள்ள இந்திய கருப்புப் பணத்தை கொண்டுவரக் கோரியும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றியத் தலைவர் பொன்பெரியசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலர் ஐயப்பன் ரவி முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் எழிலரசன் கண்டன உரையாற்றினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் குருசாமி, ஐயப்பன், முருகன், மணிமாறன், சதீஷ், ராமச்சந்திரன், ஆனந்த், எழில் உட்பட பலர் பங்கேற்றனர். கொளஞ்சிநாதன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்