உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிலுவைபுரம் - மேலமூங்கிலடி சாலைசீரமைக்க ஊராட்சித் தலைவர் கோரிக்கை

சிலுவைபுரம் - மேலமூங்கிலடி சாலைசீரமைக்க ஊராட்சித் தலைவர் கோரிக்கை

புவனகிரி:போக்குவரத்திற்கு லாயக்கற்ற சிலுவைபுரம் - மேலமூங்கிலடி சாலையை சீரமைக்க முதல்வருக்கு ஊராட்சித் தலைவர் கோரிக்கை மனு அனுப்பினார்.இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள மனு:மேல்புவனகிரி ஒன்றியத்திற்குட்பட்ட மேலமூங்கிலடி ஊராட்சியில் சிலுவைபுரம் - மேலமூங்கிலடி சாலை கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக போக்குவரத்துக்கு லாயகற்ற நிலையில் உள்ளது. இச்சாலையை சீரமைத்துத் தர அரசுக்கு கோரிக்கை வைத்தும் சீரமைக்காத நிலையில் கம்யூ., கட்சி சாலை மறியல் போராட்டம் அறிவித்தது. அதிகாரிகளின் பேச்சு வார்த்தைக்குப்பின் அந்த பிரச்னை கிடப்பில் போடப்பட்டது.தற்பொழுது முதல்வராக பொறுப்பேற்றுள்ள தாங்கள், எங்களின் வேண்டுகோளை ஏற்று புவனகிரி - சிதம்பரத்திற்கு மேலமூங்கிலடி வழியாக செல்வதற்கு பஸ் விட்டீர்கள்.அதேப்போன்று சிலுவைபுரம் - மேலமூங்கிலடி சாலையை சீரமைத்துத் தர வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ