உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நல்லாசிரியருக்கு பாராட்டு விழா

நல்லாசிரியருக்கு பாராட்டு விழா

நெல்லிக்குப்பம்:நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியைக்கு பாராட்டு விழா நடந்தது.நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பெண்கள் கிறிஸ்தவ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை விமலா கிறிஸ்டி தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றார். அவருக்கு பள்ளி சார்பில் பாராட்டு விழா நடந்தது. ஆற்காடு லுத்தரன் திருச்சபை பேராயர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.அனைத்திந்திய யு.இ.எல்.சி.ஐ., இயக்குனர் அகஸ்டின் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியை விமலா கிறிஸ்டியை பேராயர் விஜயகுமார் வாழ்த்திப் பேசினார்.தலைமையாசிரியர் தெய்வநீதி, ஒப்பிலாமணி, பிரவின்குமார், மனோஜ்குமார் ரீகன், மோகன்ராஜ், அறிவு, ரோஸ் கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ