உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரெட்டியார்பேட்டையில்மா.கம்யூ., கூட்டம்

ரெட்டியார்பேட்டையில்மா.கம்யூ., கூட்டம்

கடலூர்:கடலூர் அடுத்த ரெட்டியார்பேட்டையில் மா.கம்யூ., கிளைக் கூட்டம் நடந்தது.முரளி தலைமை தாங்கினார். ஆறுமுகம் ஆண்டு அறிக்கை வாசித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் தட்சணாமூர்த்தி, பாஸ்கரன், ஒன்றிய செயலர் மாதவன் உள்ளிட்டோர் பேசினர். கிளைச் செயலராக ஆறுமுகம் தேர்வு செய்யப்பட்டார்.கூட்டத்தில், தம்மனாம்பேட்டை - சித்திரைப்பேட்டை இணைப்பு சாலை அமைக்க வேண்டும். மீனவர்களின் வாழ்வுரிமையை பாதிக்கும் புதிய தொழிற்சாலைகள் மற்றும் செயற்கை துறைமுகங்களை தடுத்து நிறுத்த வேண்டும். சிப்காட் தொழிற்சாலைகளிலிருந்து கழிவு நீரை கடல் மற்றும் உப்பனாற்றில் கலப்பதை தடுத்த நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ