உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு

ஸ்ரீமுஷ்ணம்:ஸ்ரீமுஷ்ணம் அருகே ஒன்றிய, குறுவட்ட அளவில் நடந்த பல்வேறு போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.கீரப்பாளையம் வட்டார வள மையத்தில் ஒன்றிய அளவில் மாணவ மாணவிகளுக்கு தேசிய அளவிலான நடித்தல் போட்டி நடந்தது. இதில் பாளையங்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் முதலிடம் பெற்றனர்.மேலும் பாளையங்கோட்டை தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் நடந்த குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் அரசு உயர் நிலைப் பள்ளி மாணவர் ராஜ்கிரண் 200 மீ., ஓட்டப் பந்தயம், 100 மீ., தடை தாண்டும் போட்டிகளில் முதலிடத்தையும் மாணவி தாட்சாயிணி சைக்கிள் ஓட்டும் போட்டியில் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை தலைமை ஆசிரியர் வேணுகோபால், உதவி தலைமை ஆசிரியர் செந்தமிழ்ச்செல்வி, உடற்கல்வி ஆசிரியர் ஜவகர், ஆசிரியர்கள் பாண்டுரங்கன், கிரேசி, சந்திரகுமார் பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி