உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிதம்பரம் ராமகிருஷ்ணா பள்ளிவிளையாட்டுப் போட்டி பரிசளிப்பு

சிதம்பரம் ராமகிருஷ்ணா பள்ளிவிளையாட்டுப் போட்டி பரிசளிப்பு

சிதம்பரம்:சிதம்பரம் ராமகிருஷ்ணா பள்ளி ஆண்டு விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.சிதம்பரம் எம்.கே. தோட்டம் ராமகிருஷ்ணா பள்ளி விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.குறுவட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. பள்ளிக்குழு துணைத் தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ரவிசங்கர் வரவேற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் ராஜேந்திரன் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். 1,500 மாணவர்கள் பங்கேற்ற கூட்டு உடற்பயிற்சி நடந்தது.ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் சீனுவாசன், வெங்கடேசன் செய்திருந்தனர். ஆசிரியர் முத்துக்குமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி