உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விவசாயிகள் கலந்துரையாடல்பணிமனை பயிற்சி முகாம்

விவசாயிகள் கலந்துரையாடல்பணிமனை பயிற்சி முகாம்

விருத்தாசலம்:விருத்தாசலம் அடுத்த வேப்பூரில் நல்லூர் மற்றும் மங்களூர் ஒன்றிய கோமுகி உபவடிநிலப் பகுதி விவசாயிகளுக்கு ஒரு நாள் கலந்துரையாடல் பணிமனை பயிற்சி முகாம் நடந்தது.மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் தனவேல் தலைமை தாங்கினார்.கோட்ட வேளாண் அலுவலர் அமுதா வரவேற்றார்.கூட்டத்தில் விளைபொருள் குழு விவசாயிகளுக்கு தங்கள் விளை பொருட்களை தேவைப்படும் பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபகரமாக விற்பனை செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.மேலும் வேளாண்மை துணை மற்றும் தோட்டக்கலை துறையின் திட்டங்கள், விற்பனை வாய்ப்புகள் குறித்தும் விளக்கப்பட்டது.பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த திருமூர்த்தி, ரவிக்குமார், தங்கராஜ், வீரமணி, வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் கண்ணன், தோட்டக்கலை உதவி இயக்குனர் முருகன், சிவக்குமார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்