உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / என்.எல்.சி., அங்கீகாரம் பெற்ற சங்கமாக அ.தி.மு.க., மாற வேண்டும்: எம்.எல்.ஏ., பேச்சு

என்.எல்.சி., அங்கீகாரம் பெற்ற சங்கமாக அ.தி.மு.க., மாற வேண்டும்: எம்.எல்.ஏ., பேச்சு

நெய்வேலி:''என்.எல்.சி.,யில் நடக்கும் ரகசிய வாக்கெடுப்பு தேர்தலில் அ.தி. மு.க.,வைச் சேர்ந்த தொழிலாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்'' என சிவசுப்ரமணியன் எம்.எல்.ஏ., பேசினார்.அ.தி.மு.க., சார்பில் அண்ணா துரை பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நெய்வேலி மெயின் பஜாரில் நடந்தது. நகர செயலர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.அ.தி.மு.க., தொழிற் சங்க பிரமுகர்கள் ராமஉதயகுமார், அபு, வெற்றிவேல், இளங்குமரன், ஜெ., பேரவை நிர்வாகிகள் ஜெயக்குமார், மனோகரன், சொர்ணமூர்த்தி, பாலசுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில் சிவசுப்ரமணியன் எம்.எல்.ஏ., பேசுகையில், 'என்.எல்.சி., யில் நடைபெற இருக்கும் ரகசிய வாக்கெடுப்பு தேர்தலில் தொழிலாளர்கள் அனைவரும் அ.தி.மு.க., தொழிற் சங்கத்திற்கு அதிகப்படியான ஓட்டுகளை அளித்து அங்கீகாரம் பெற்ற சங்கமாக தேர்வு செய்யப்பட வேண்டும். அப்போதுதான் என்.எல்.சி., தொழிலாளர்களுக்கும் அவர்களது கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி அவர்களது வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ