உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கூட்டணி பலம் இல்லாததால்அனைத்து கட்சிகளும் "டல்

கூட்டணி பலம் இல்லாததால்அனைத்து கட்சிகளும் "டல்

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு கூட்டணி கட்சிகள் பலம் இல்லாததால் அனைத்து கட்சியினரும் தேர்தல் பணியில் ஈடுபடாமல் மந்தமாக உள்ளனர்.பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றியம், பரங்கிப்பேட்டை, கிள்ளை பேரூராட்சிகள் உள்ளது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் போல் உள்ளாட்சித் தேர்தலிலும் கூட்டணி தொடரும் என அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கணக்கு போட்டு வைத்திருந்தனர். வெற்றி வாய்ப்பு சாதகமில்லாத இடங்களை கூட்டணிக்கு விட்டுக் கொடுக்க நினைத்திருந்தனர்.இந்நிலையில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க., வில் பரங்கிப்பேட்டை, கிள்ளை பேரூராட்சி தலைவர் பதவிக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர்.ஆனால் அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த தே.மு.தி.க., இந்திய கம்யூ., மா.கம்யூ., மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இடம் பெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.அதேப்போன்று தி.மு.க., கூட்டணியில் இருந்த காங்., - பா.ம.க., வி.சி., உள்ளிட்ட கட்சிகள் இருந்தன. பா.ம.க., கூட்டணியில் இருந்து விலகிவிட்டது. தி.மு.க., தனித்துப்போட்டியிடபோவதாக அறிவித்துள்ளது.இதனால் அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. கூட்டணி பலத்தில் எளிதாக ஜெயித்துவிடலாம் என கணக்கு போட்டவர்களுக்கு தற்போது என்ன செய்வதென புரியாமல் மண்டை காய்ந்துபோய் உள்ளனர்.இதனால் பேரூராட்சித் தலைவர், கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், பதவிகளை விட ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுவதில் தான் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை