உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கொளப்பாக்கம் ஊராட்சித் தலைவர் பதவிபொதுப் பிரிவிற்கு மாற்றம் செய்து உத்தரவு

கொளப்பாக்கம் ஊராட்சித் தலைவர் பதவிபொதுப் பிரிவிற்கு மாற்றம் செய்து உத்தரவு

பண்ருட்டி:பண்ருட்டி அடுத்த கொளப்பாக்கம் ஊராட்சித் தலைவர் பதவி பொது பிரிவிற்கு மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.பண்ருட்டி அடுத்த கொளப்பாக்கம் ஊராட்சித் தலைவர் பதவி கடந்த 2006ம் ஆண்டு மறு சுழற்சி காரணமாக தாழ்த்தப்பட்டோர் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.ஆனால் அப்பகுதியில் மிகவும் பிற்பட்டோர் பிரிவினைச் சேர்ந்தவர்களே உள்ளனர். தாழ்த்தப்பட்டோர் அங்கு வசிக்கவில்லை. வாக்காளர் பட்டியலிலும் இடம் பெறவில்லை. இதன் காரணமாக ஊராட்சித் தலைவர் பணியிடம் நிரப்பப்படாமல் காலியாகவே இருந்து வந்தது. ஊராட்சி துணைத் தலைவர் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். இந்நிலையில் தமிழக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவில் பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம் கொளப்பாக்கம் ஊராட்சித் தலைவர் பணியிடம் தாழ்த்தப்பட்டோர் பெண்கள் ஒதுக்கீட்டிலிருந்து பொதுப் பிரிவிற்கு மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ