உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பல்கலை மண்டலங்களுக்கிடையேயானகோ - கோ, கூடைப்பந்து போட்டி

பல்கலை மண்டலங்களுக்கிடையேயானகோ - கோ, கூடைப்பந்து போட்டி

கடலூர்:திருவள்ளுவர் பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயான கோ - கோ, கூடைப்பந்து போட்டி கடலூரில் நேற்று துவங்கயது.திருவள்ளுவர் பல்கலைக் கழக மண்டலங்களுக்கிடையே ஆண்களுக்கான கோ-கோ, கூடைப்பந்து போட்டி கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் நடந்தது.கல்லூரி முதல்வர் ரட்சகர் துவக்கி வைத்தார். திருவள்ளுவர் பல்கலைக் கழக இயக்குனர் அமல்தாஸ் முன்னிலையில் நடந்தது.கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மண்டலங்களைச் சேர்ந்த கல்லூரி அணிகள் பங்கேற்றன. கூடைப்பந்து இறுதிப் போட்டிக்கு கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரி அணியும், திருப்பத்தூர் தூய இருதய கல்லூரி அணியும் தகுதி பெற்றுள்ளன. கோ-கோ போட்டிக்கு கடலூர் மண்டல அணியும், வேலூர் மண்டல அணியும் தகுதி பெற்றன.ஏற்பாடுகளை கடலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் கவாஸ்கர், உடற்கல்வித் துறை இயக்குனர் ராஜமாணிக்கம் செய்திருந்தனர்.இறுதிப் போட்டி இன்று 22ம் தேதி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ