உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கொலு பொம்மைகள் தயாரிக்கும்பணியில் மகளிர் சுய உதவிக் குழுவினர்

கொலு பொம்மைகள் தயாரிக்கும்பணியில் மகளிர் சுய உதவிக் குழுவினர்

புதுநகர்:கடலூர் முதுநகரில் நவராத்திரி பண்டிகைக்காக கொலு பொம்மை செய்யும் பணியில் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.கடலூர் முதுநகர், மணவெளியில் குறிஞ்சிமலர் மகளிர் சுய உதவிக்குழு செயல்பட்டு வருகிறது. 20க்கும் மேற்பட்ட பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் ஒவ்வொரு பண்டிகையின் போதும் தேவையான களிமண் சிலைகளை செய்து விற்பனை செய்து வருகின்றனர்.வரும் 28ம் தேதி தொடங்கி 10 நாள் நடைபெறும் நவராத்திரி விழாவிற்காக கொலு பொம்மைகள் செய்யும் பணியில் சுய உதவிக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இப்பொம்மைகள் ஒரு செட் 25 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.இங்கு தயாராகும் கொலு பொம்மைகள் தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.நவராத்திரி பண்டிகை முடிந்தவுடன், கிறிஸ்துமஸ் பண்டிகை வர உள்ளதையடுத்து கிறிஸ்துவ பொம்மைகள் செய்யும் பணியில் ஈடுபட உள்ளதாக சுய உதவிக்குழு பெண்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ