உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மலையப்பன் சேவையில்சரநாராயண பெருமாள் காட்சி

மலையப்பன் சேவையில்சரநாராயண பெருமாள் காட்சி

கடலூர்:திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் முழுவதும் மூலவர் பெருமாள் மலையப்பன் சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் முழுவதும் மூலவர் சரநாராயண பெருமாள் நெய்தீப ஒளியில் திருப்பதி மலையப்பன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இன்று (23ம் தேதி) காலை 10 மணிக்கு மூலவர் பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம், 12 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது.திருப்பதி மலையில் இருந்து வரவழைக்கப்பட்ட மேல் சாத்து வஸ்திரம் சமர்ப்பணம் செய்யப்படுகிறது. நாளை 24ம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு 1008 சகஸ்ரதீப அலங்காரத்தில் ஊஞ்சல் சேவை நடக்கிறது. பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் மலையப்பன் சேவையில் தரிசிப்பது சிறப்பு என்று தலைமை அர்ச்சகர் ஸ்ரீராமன் பட் டாச்சாரியார் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ