உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் சிதம்பரம் பயணிகள் மகிழ்ச்சி

திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் சிதம்பரம் பயணிகள் மகிழ்ச்சி

சிதம்பரம் : தினசரிசேவையாக மாற்றப்பட்ட திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு முதல் முறையாக சிதம்பரம் ரயில் நிலையம் வந்ததால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.சென்னையில் இருந்து திருச்செந்தூர் இடையே வாரம் ஒருமுறை திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வந்தது. பயணிகள் கோரிக்கையை ஏற்று அந்த ரயில் நேற்று முதல் தினசரிசேவையாக மாற்றப்பட்டுள்ளது.இந்த ரயில் சென்னை எழும்பூரில் மாலை 4.05க்கு புறப்பட்டு 8.30 மணியளவில் மணியளவில் சிதம்பரம் வருகிறது. திருச்செந்தூரில் இரவு 7.30 மணியளவில் புறப்பட்டு மறுநாள் காலை 6.30 மணிக்கு சிதம்பரம் வருகிறது.அந்த வகையில் முதல் முறையாக நேற்று மாலை சென்னை எழும்பூரில் 4.05 மணிக்கு புறப்பட்ட திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 8.22 மணிக்கு சிதம்பரம் வந்தது.சிதம்பரம் வந்த ரயிலைப் பார்த்து பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ