உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கொலை மிரட்டல் "போதை ஆசாமிக்கு அபராதம்

கொலை மிரட்டல் "போதை ஆசாமிக்கு அபராதம்

கடலூர் : ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 'போதை' ஆசாமிக்கு கடலூர் கோர்ட்டில் அபராதம் விதிக்கப்பட்டது.கடலூர், செல்லங்குப்பத்தைச் சேர்ந்தவர் மணி, 30. இவர், கடந்த 2009ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி செம்மண்டலம் ஆஞ்சநேயர் கோவில் அருகில் குடிபோதையில் தகராறு செய்து பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்தார். அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த புதுநகர் போலீசார் வள்ளி, முகமது அமானுல்லா ஆகியோர் மணியை பிடிக்கச் சென்றனர்.அப்போது போலீசாரை பணி செய்ய விடாமலும், கொலை மிரட்டல் விடுத்தும் ஆபாசமாக பேசினார்.இதுகுறித்த புகாரின் பேரில் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து மணியை கைது செய்து, கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட 2ல் ஆஜர்படுத்தி வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் சுகந்தி, குற்றவாளி மணிக்கு 2,500 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை