உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆதிபராசக்தி மகளிர் மன்றத்தினர் உலக அமைதி வேண்டி வேள்வி பூஜை

ஆதிபராசக்தி மகளிர் மன்றத்தினர் உலக அமைதி வேண்டி வேள்வி பூஜை

சிதம்பரம் : சிதம்பரம் ஆதிபராசக்தி மகளிர் மன்றம் சார்பில் உலக அமைதி வேண்டி வேள்வி பூஜை நடந்தது.சிதம்பரம் ஆதிபராசக்தி மகளிர் மன்றத்தில் உலகம் அமைதி வேண்டியும், நவராத்தி விழாவை முன்னிட்டு சிறப்பு வேள்வி பூஜை நடந்தது. நகர ஒருங்கிணைப்பாளர் விஜயகுமாரி தலைமை தாங்கினார்.வேள்வி பூஜையை டாக்டர்கள் பத்மினி, பிருந்தா, பிந்து துவக்கி வைத்தனர்.மாவட்ட பொருளாளர் பழனியப்பன், மாவட்ட வேள்விக்குழு தலைவர் செல்வராஜ் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினர்.நிகழ்ச்சியில் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் மோகன்குமார், இணை பேராசிரியர்கள் பாலகுமார், ஞானகுமார், பாலமுருகன், குமார், மகளிரணி பொறுப்பாளர்கள் அஞ்சம்மாள், பருவதவர்த்தினி, சுமதி, தனம், ராதிகா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ