உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஊர்காவல் படை வீரர்களுக்கு கடலுார் எஸ்.பி., வாழ்த்து

ஊர்காவல் படை வீரர்களுக்கு கடலுார் எஸ்.பி., வாழ்த்து

கடலுார் : மத்திய அரசின் பதக்கம் பெற்ற ஊர்காவல் படை வீரர்களை எஸ்.பி., பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், ஊர்காவல் படை பிரிவில் தீயணைப்பு சேவை, குடிமைப் பாதுகாப்புகளில் சிறப்பாக பணி செய்த படை வீரர்களுக்கு 2024ம் ஆண்டுக்கான ஊர்காவல் படை தலைமை இயக்குனர் பதக்கம் மற்றும் பாராட்டு சான்று வழங்கப்பட்டுள்ளது. இதனை கடலுார் மாவட்ட ஊர்காவல் படையில் சிதம்பரம் கோட்ட தளபதி வேதரத்தினம், படை தளபதிகள் சேத்தியாதோப்பு மதியழகன், கடலூர் நன்னன், சிதம்பரம் உதவி அணி தலைவர் பரணிராஜா, பண்ருட்டி முருகானந்தம் ஆகியோர் பதக்கம் பெற்றனர். இவர்களை கடலுார் எஸ்.பி., ஜெயக்குமார் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். அப்போது ஊர்க்காவல் படை வட்டார தளபதி அம்ஜத்கான் உடன் இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை