வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அவங்க குடும்பத்தினர் இந்த புனித தொழிலை தொடர்வதற்குஅரசு காவல் துறை சார்பில்முழு உதவி ஒத்துழைப்பு தரப்படும் .மாமுல் மட்டும் வந்தால் போதும்
கடலுார் : கஞ்சா வியாபாரிகள் 3 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். நெய்வேலியில் 6 கிலோ கஞ்சா பதுக்கியது தொடர்பாக, கடந்த 1ம் தேதி வட்டம் 29ஐச் சேர்ந்த மோசஸ் சம்பத் மகன் பிரதீப்மோகன்,29; வட்டம் 24ஐ சேர்ந்த, ரவிச்சந்திரன் மகன் சந்துரு (எ) தீபக்ராஜ்,25; மாற்றுக் குடியிருப்பு ஜஹாங்கீர் மகன் ஷாகுல் ஹமீது,25; ஆகியோரை தெர்மல் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.இவர்களில், பிரதீப்மோகன் மீது கஞ்சா, சாராயம் உள்ளிட்ட 8 வழக்குகளும், சந்துரு (எ) தீபக்ராஜ் மீது சாராயம், குட்கா என 3 வழக்குகளும், ஷாகுல் ஹமீது மீது 2 கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளன.இவர்களின் குற்றச் செயலை தடுக்கும் பொருட்டு எஸ்.பி., ஜெயக்குமார் பரிந்துரையை ஏற்று, மூவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை, கடலுார் சிறை அதிகாரிகளிடம் நெய்வேலி தர்மல் போலீசார் நேற்று வழங்கினர்.
அவங்க குடும்பத்தினர் இந்த புனித தொழிலை தொடர்வதற்குஅரசு காவல் துறை சார்பில்முழு உதவி ஒத்துழைப்பு தரப்படும் .மாமுல் மட்டும் வந்தால் போதும்