மேலும் செய்திகள்
கருவூலத்துறையில் ஆய்வு கூட்டம்
2 minutes ago
கடலுாரில் 20,000 ஏக்கர் பயிர்கள் மூழ்கின
25-Nov-2025
குழந்தைகளுக்கு சூடு கொடூர தாய் கைது
25-Nov-2025
அ .தி.முக., முன்னாள் அமைச்சர் கொலை வழக்கில் பவாரியா கொள்ளையர்களை சுட்டுப்பிடிக்க அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி ஐ.ஜி. ஜாங்கிட் தலைமையில், 4 சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார், 9 பேரை கைது செய்தனர். அதில் 2 பேர் இறந்து நிலையில், 3 பேர் தலைமறைவாகிவிட்டனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு பின் சென்னை கோர்ட்டில் நடந்து வந்த வழக்கில் ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதில் அசோக் என்பவரை தற்போதைய கடலுார், எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையிலான டீம் தான் கைது செய்தது. கடந்த, 2005ம் ஆண்டு நடந்த கொடூர கொலை சம்பவம் தொடர்பாக, 4 சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அப்போது என்ன நடந்தது..? தற்போதைய எஸ்.பி., திருமணமான புதிதில் கடந்த, 2005ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக திருக்கோவிலுாருக்கு அவரது குடும்பம் வருகை தந்தது. அப்போது அவர் திருக்கோவிலுாரில் டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்தார். திடீரென ஐ.ஜி., ஜாங்கிட்டிடம் இருந்து ஜெயக்குமாருக்கு போன் வந்தது. நீங்கள் நாளை 2:00 மணிக்குள் திருவள்ளூர் எஸ்.பி., யிடம் சென்று ரிப்போர்ட் செய்ய வேண்டும் என அவர் உத்தரவிட்டார். அதன்படி உடனே புறப்பட்டு சென்று எஸ்.பி.,யின் முன்பு ஆஜரானார். அப்போது அவருக்கு ஒரு சிறப்பு குழுவிற்கு தலைமையேற்க அறிவுறுத்தப்பட்டது. அவருடன், 6 போலீசார் ராஜஸ்தான் ரயிலில் பயணமாகினர். குற்றவாளிகளில் அசோக்கை கைது செய்வதுதான் இந்த குழுவிற்கு பணிக்கப்பட்ட பணியாக இருந்தது. அதற்காக 15 மாதங்கள் கடும் குளிர், கடும் வெயிலில் அந்த குழுவினர், கஷ்டப்பட்டனர். ராஜஸ்தானில் உள்ள அந்த கிராமம் மிகவும் பள்ளமான பகுதி. மேலிருந்து அந்த இடத்திற்கு வருபவர்களை எளிதாக நோட்டமிட முடியும். அதனால் தான், அவர்கள் சுலபமாக போலீசாரிடம் இருந்து தப்பி வந்தனர். இந்நிலையில், அசோக்கை பிடிக்க செல்லும்போது, அந்த கிராமமே திரண்டு கட்டை துப்பாக்கி, இரும்பு கம்பி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் விரட்டியது. அவ்வாறு ஒரு முறை சென்றபோது, தனிப்படை போலீசாரை பயங்கர ஆயுதங்களால் துரத்தினர். இதில் போலீசார் தப்பிவிட்டனர். மேலும் இரண்டாவது முறை அக்கிராமத்திற்கு சென்றபோது, அக்கிராமமே திரண்டு வந்தது. அதன் பின்னர் அசோக்கை சரணடைய கூறியபோது, சுலபமாக விடவில்லை. அதன் பின்னர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அசோக் டி.எஸ்.பி., யின் காலில் விழுந்து, தாம் தவறு செய்துவிட்டதாக எண்ணி அழுதுள்ளார். அசோக்கை பிடிப்பதற்காக, 7 நாட்கள் காரிலேயே உட்கார்ந்து அந்த குழு நோட்டம் பார்த்தது. மேலும், 9 அடி உயர கடுகு செடிக்குள் புகுந்து அவர்களை தேடியது. இரவு கடும் குளிராக இருந்ததால் சிலீப்பிங் பேக்கில் உறங்கியது. பகலில் அடிக்கும் வெயிலில் அவதிப்பட்டது. அந்த நிகழ்ச்சியை இன்றளவும் மறக்க முடியாது எனவும், அத்தனை கஷ்டப்பட்டு அசோக்கை கைது செய்த நிலையில், அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அந்த தனிப்படை குழுவினர் நினைவு கூர்ந்துள்ளனர்.
2 minutes ago
25-Nov-2025
25-Nov-2025