மேலும் செய்திகள்
அதிகாரிகள் இன்றி தள்ளாடும் நகராட்சி
20-Sep-2024
பண்ருட்டி நகராட்சி கமிஷனராக இருப்பவர் பிரீத்தி. கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பணியிட மாற்றத்தில் பண்ருட்டி கமிஷ்னராக பொறுப்பேற்றார். நகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள கமிஷனர் குடியிருப்பில் குடியிருந்து வருகிறார். நேற்று முன்தினம் நகராட்சி கமிஷனர் வீட்டில் இருந்த நிலையில், அவரது குடியிருப்பிற்கான மின் இணைப்பை மின்வாரிய ஊழியர்கள் துண்டித்தனர்.மின்சாரம் துண்டிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து கமிஷனர் கேட்டதற்கு, ரூ. 17,000 மின் கட்டணம் செலுத்தவில்லை என, கூறியுள்ளனர். இதனால் கடுப்பான கமிஷனர் நகராட்சி அலுவலக அலுவலர்களை தொடர்பு கொண்டு, கடிந்து கொண்டார். பின்னர், உடனடியாக நகராட்சி பில் கலெக்டர் மூலம் பணம் வசூல் செய்து, மின் கட்டணம் செலுத்தப்பட்டது. அதன் பிறகு இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது.
20-Sep-2024