உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பாதாள சாக்கடை மேன் ேஹால் சேதம்

பாதாள சாக்கடை மேன் ேஹால் சேதம்

கடலுார்: கடலுாரில் சேதமடைந்த பாதாள சாக்கடை மேன் ேஹால் சீரமைக்காததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.கடலுாரில் இருந்து கேப்பர் மலை செல்லும் சாலை வண்டிப்பாளையம் வழியாக மத்திய சிறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினந்தோறும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றது. இந்நிலையில், இச்சாலையில் உள்ள வரவூர் மாரியம்மன் கோவில் எதிரில் பாதாள சாக்கடை மேன் ேஹால் சேதமடைந்துள்ளது. இந்த மேன் ேஹால் சேதமடைந்து பல நாட்களாகியும் அதிகாரிகள் சீரமைக்காததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் மேன் ேஹால் பகுதியில் மரக்கிளைகள் வைத்து எச்சரிக்கை செய்துள்ளனர்.எனவே, பாதாள சாக்கடை மேன் ேஹாலை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை