வி ஸ்கொயர் மாலில் நடன நிகழ்ச்சி
கடலுார் : கடலுார் வி ஸ்கொயர் மாலில், மைக்கேல் ஜாக்சன் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த நடன நிகழ்ச்சியில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். கடலுார் வி ஸ்கொயர் மாலில் மைக்கேல் ஜாக்சன் பிறந்த நாளை முன்னிட்டு நடன நிகழ்ச்சி நடந்தது. இதில் நடனப்பள்ளியில் பயிற்சி பெற்ற 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று நடனமாடி பொதுமக்களை கவர்ந்தனர். வி ஸ்கொயர் மால் உரிமையாளர் அனிதா ரமேஷ், நடனமாடிய மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கினார். நிர்வாக இயக்குனர் சரவணன், டான்ஸ் அகாடமி நிர்வாகி பூர்ணிமா ஆகியோர் உட னிருந்தனர்.