புவனகிரியில் ஆக்கிரமிப்பு குளங்களை மீட்க கோரிக்கை
புவனகிரி : புவனகிரி பேரூராட்சி பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள குளங்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஊழல் எதிர்ப்பு இயக்கம் கோரிக்கை வைத்துள்ளது.இது குறித்து ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் வழக்கறிஞர் குணசேகரன், கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:புவனகிரி பேரூராட்சியில் 18 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதியில் குளங்கள் மற்றும் வெள்ளாற்று வடகரை ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றும் கழிவுநீர இந்த குளங்களில் கலப்பதால் சுகாதார சீர்க்கேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை கோரிக்கை வைத்தும் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. எனவே, கலெக்டர் நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.