உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குடிநீர் தொட்டி பழுது புனரமைக்க கோரிக்கை

குடிநீர் தொட்டி பழுது புனரமைக்க கோரிக்கை

பெண்ணாடம் : வெண்கரும்பூரில் பராமரிப்பின்றி பழுதான மேல்நிலை குடிநீர் தொட்டியை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெண்ணாடம் அடுத்த வெண்கரும்பூர் ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். ஊராட்சி அலுவலகம் அருகே கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டி மூலம் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.நாளடைவில் போதிய பராமரிப்பின்றி உள்ள குடிநீர் தொட்டியின் பில்லர் மற்றும் பல இடங்களில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் தண்ணீர் தேக்கி வைக்க அச்சம் அடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.எனவே, வெண்கரும்பூரில் பழுதான மேல்நிலை குடிநீர் தொட்டியை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை