உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இந்துமக்கள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் 

இந்துமக்கள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் 

பண்ருட்டி: இந்துமக்கள் கட்சி சார்பில் தி.மு.க.அரசை கண்டித்து கண்டன ஆர்ப் பாட்டம் நேற்று நடந்தது.பண்ருட்டி இந்திரா காந்தி சாலையில் இந்து மக்கள் கட்சி சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றாத தி.மு.க., அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட் டத்திற்கு மாவட்ட தலைவர் தேவா தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொது செயலாளர் சக்திவேல், செயலாளர் கார்த்தி, அமைப்பு பொது செயலாளர் ஜம்புலிங்கம், இளைஞரணி பாலசந்தர், சட்டமன்ற தொகுதி தலைவர் லட்சுமணன், நகர செயலாளர் கண்மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ