கருப்பு பேட்ஜ் அணிந்து பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
கடலுார்: தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம் சார்பில் கடலுார் அரசு பெரியார் கல்லுாரி நுழைவு வாயில் முன்பு கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடந்தது.கடலுார் கிளை தலைவர் திலக்குமார் தலைமை தாங்கினார். மண்டலப் பொருளாளர் சக்கரவர்த்தி முன்னிலை வகித்தார். கிளைச் செயலர் சேதுராமன் வரவேற்றார். துணைத் தலைவர் ராஜகுமார், இணைச் செயலர் ராஜலட்சுமி, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் பாவாடை உள்ளிட்ட பேராசிரியர்கள் பங்கேற்றனர்.அண்ணாமலைப் பல்கலைக்கழக உபரி ஆசிரியர்களை அரசு கல்லுாரிகளிலேயே நிரந்தரம் செய்யக் கூடாது. மீண்டும் அவர்களை அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கே திருப்பி அனுப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.