மேலும் செய்திகள்
வி.சி., கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
16-Oct-2025
விருத்தாசலம்: வீராரெட்டிகுப்பம் அமலா பள்ளியை கண்டித்து, மா.கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. விருத்தாசலம் பாலக்கரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், நகர செயலாளர் சங்கரய்யா தலைமை தாங்கினார். வழக்கறிஞர் குமரகுரு, ஒன்றிய செயலாளர் கலைச்செல்வன், மூத்த நிர்வாகிகள் சந்திரசேகரன், ஜீவானந்தம் முன்னிலை வகித்தனர். அதில், விருத்தாசலம் அடுத்த வீராரெட்டிகுப்பம் கிராமத்தில் செயல்படும் அமலா பள்ளியில் தொடர்ந்து நடந்து வரும் பாலியல் கொடுமைகளால் தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்; மாணவிகள், பெண் ஆசிரியர்கள் பாதுகாப்பை வலியுறுத்தி அரசே பள்ளியை ஏற்று நடத்த உத்தரவிட வேண்டும்; பாதிக்கப்பட்ட பெண் ஆசிரியர்கள், மாணவிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்; என வலியுறுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் மாதவன், மாநிலக்குழு வாலண்டினா, மாவட்டக்குழு ஜெயராமன் கண்டன உரையாற்றினர்.
16-Oct-2025