உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வளர்ச்சி திட்டப் பணி : வேளாண் அமைச்சர் ஆய்வு

வளர்ச்சி திட்டப் பணி : வேளாண் அமைச்சர் ஆய்வு

வடலுார் : குறிஞ்சிப்பாடி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சிகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, வேளாண்மைத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் சரண்யா முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், குறிஞ்சிப்பாடி, அண்ணாமலை நகர், கிள்ளை, புவனகிரி, காட்டுமன்னார்கோவில், கங்கைகொண்டான், பரங்கிப்பேட்டை பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.பேரூராட்சிகள் உதவி இயக்குனர் வெங்கடேசன், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் பாலமுருகன், சேர்மன் கோகிலா குமார், துணைச் சேர்மன் ராமர் உட்பட பலர்பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை