வளர்ச்சி பணிகள் கலெக்டர் ஆய்வு
குள்ளஞ்சாவடி: குறிஞ்சிப்பாடி பகுதியில் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார். குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குள்ளஞ்சாவடி அடுத்த பூவாணிக்குப்பம் ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில் 99.86 லட்சம் ரூபாய் மதிப்பில் பெருமாள் ஏரிக்கரை- ஆணையம்பேட்டை இடையே சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார். அகரம் மற்றும் தீர்த்தனகிரி ஊராட்சிகளில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுமான பணியை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பி.டி.ஓ.,க்கள் வெ ங்கடேசன், ராமச்சந்திரன் உடனிருந்தனர்.