உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  வேப்ப மரத்தில் வடிந்த பால் பக்தர்கள் சிறப்பு பூஜை

 வேப்ப மரத்தில் வடிந்த பால் பக்தர்கள் சிறப்பு பூஜை

வேப்பூர்: வேப்பூர் அருகே வேப்ப மரத்தில் இருந்து பால் வடிந்ததால் பக்தர்கள் சிறப்பு பூஜை செய்து வழிப்பட்டனர். வேப்பூர் அடுத்த பாசாரில் கிராமத்தில், பாசார் - மங்களூர் சாலையோரம் உள்ள 10 ஆண்டு வயது கொண்ட வேப்ப மரத்தில் இருந்து பால் வடிய துவங்கியது. வேப்ப மரத்தில் பால் வடியும் தகவல் கிராமம் முழுவதும் பரவியதால், அங்கு ஏராளமான பக்தர்கள் திரண்டனர். வேப்ப மரத்திற்கு, மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, சிகப்பு துணியை கட்டினர். பின், தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்து, பரவசத்துடன் வழிப்பட்டனர். வேப்பமரத்தில் இருந்து பால் வடிந்த தகவல் அப்பகுதி முழுவதும் பரவியதால் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை