உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தைப்பூச ஜோதி தரிசன விழா கொடியேற்றம் வடலுார் சத்திய ஞானசபையில் பக்தர்கள் குவிந்தனர்

தைப்பூச ஜோதி தரிசன விழா கொடியேற்றம் வடலுார் சத்திய ஞானசபையில் பக்தர்கள் குவிந்தனர்

வடலுார் : வடலுார் சத்திய ஞான சபையில், தைப்பூச ஜோதி தரிசன விழா நேற்று துவங்கியது.கடலுார் மாவட்டம், வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 153ம் ஆண்டு தைப்பூசம் ஜோதி தரிசன பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.காலை 7:30 மணிக்கு தர்ம சாலையில் சிறப்பு பூஜைகள், வழிபாடு நடந்தது. தொடர்ந்து, வள்ளலார் அவதரித்த மருதுார், தண்ணீரில் விளக்கு எரிய செய்த கருங்குழி, வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் ஆகிய இடங்களிலும் சன்மார்க்க கொடியேற்றப்பட்டது.பார்வதிபுரம் பொதுமக்கள், வள்ளலார் பயன்படுத்திய பொருட்களை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைத்து சுமந்து, பழங்கள் மற்றும் சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக சென்று சத்திய ஞானசபை கொடிமரம் அருகே வள்ளலார் பாடல்களை பாடியபடி சன்மார்க்க கொடியேற்றி வழிபாடு செய்தனர்.ஜோதி தரிசன பெருவிழா இன்று (25ம் தேதி) காலை 6:00 மணிக்கு சத்திய ஞான சபையில் ஏழு திரைகள் நீக்கி தைப்பூச ஜோதி தரிசனம் நடக்கிறது.காலை 10:00 மணி, நண்பகல் 1:00 மணி, இரவு 7:00 மணி, 10 மணி, நாளை (26ம் தேதி) காலை 5:30 மணி என ஆறு காலம் எழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் நடக்கிறது.விழாவையொட்டி வடலுார் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன. எஸ்..பி., ராஜாராம் தலைமையில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், நிர்வாக அதிகாரி ராஜா சரவணகுமார், கோவில் நிர்வாக கமிட்டியினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை