டி.ஜி.எம்., பள்ளி மாணவர்கள் சிலம்பத்தில் முத்திரை
சேத்தியாத்தோப்பு; சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேஷ்னல் சிலம்பம் பயிற்ச்சி அகாடமி சார்பில் மாணவர்களுக்கான சிலம்பம் போட்டி நடந்தது. சேத்தியாத்தோப்பு டி.ஜி,எம்., பள்ளி மாணவர்கள் பங்கேற்று ஒற்றைக்கம்பு, இரட்டைக்கம்பு, மான் கொம்பு, சுருள்வாள் உள்ளிட்ட பல்வேறு சிலம்பம் மற்றும் கராத்தே போட்டிகளில் பங்கேற்று முதலிடம் பிடித்தனர்.சாதனை மாணவர்களை பள்ளி நிர்வாகி மற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், சிலம்பம் ஆசான் வேல்முருகன் பாராட்டினர்.