உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிள்ளை ரயில் நிலையத்தில் பூட்டிக்கிடக்கும் கழிவறை

கிள்ளை ரயில் நிலையத்தில் பூட்டிக்கிடக்கும் கழிவறை

கிள்ளை : கிள்ளை ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்ட கழிவறை பயணிகள் பயன் பாட்டிற்கு திறக்கப்படாமல் பூட்டிக் கிடக்கிறது. கிள்ளை ரயில் நிலையம் தற்போது மூன்று வழி கிராசிங் அமைக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் அனைத்துப் பணிகளும் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கழிவறை கடந்த ஓராண்டிற்கு மேலாக திறக்கப்படாமல் பூட்டிக் கிடக்கிறது. இதனால் பயணிகள் அவசரத்திற்கு திறந்த வெளியை நாடிச் செல்லும் நிலை உள்ளது. மேலும், இரவு நேரத்தில் போதுமான விளக்கு வசதி இல்லாது ரயில் நிலையம் இருண்டு கிடப்பதால் அந்த வழியில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். பயணிகள் நலன் கருதி காட்சிப்பொருளாக உள்ள கழிவறைக்கு தண்ணீர் வசதி செய்து பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும். மேலும், பழுதடைந்துள்ள மின் விளக்குகளை சரி செய்ய சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ