உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நவக்கிரக சிலைகள் கண்டெடுப்பு

நவக்கிரக சிலைகள் கண்டெடுப்பு

பண்ருட்டி : காட்டுக்கூடலுார் ஏரியில் நவக்கிரக சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த காட்டுக்கூடலுாரை சேர்ந்தவர் மனோகரன்,47; இவர், அதே பகுதியில் உள்ள பெரிய ஏரியில் நேற்று காலை குளிக்க சென்றார். அப்போது, தண்ணீருக்குள் கருங்கற்களால் செய்யப்பட்ட நவக்கிரக சுவாமி சிலைகள் கிடந்ததை கண்டு வெளியே கொண்டு வந்தார்.தகவலறிந்த கிராம மக்கள் சம்பவ இடத்தில் திரண்டு சுவாமி சிலைகளை வழிபட்டனர். வேறொரு ஊரில் கோவில் புதுப்பிக்கப்படும் போது பழைய சிலைகளை அகற்றி ஏரியில் வீசிச் சென்றார்களா என்ற கோணத்தில் முத்தாண்டிக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை