உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கல்வி வளர்ச்சி குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி

கல்வி வளர்ச்சி குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி

கிள்ளை: கிள்ளை எம்.ஜி.ஆர்., நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மாணவர்களிடம், கல்வி வளர்ச்சி குறித்து, எம்.எஸ். சாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.கிள்ளை எம்.ஜி.ஆர்., நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வி வளர்ச்சி குறித்து, கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் குமரவேல் தலைமை தாங்கினார். கடலூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் இளங்கோவன், எம்.ஜி.ஆர்., நகர் கிராம தலைவர் செஞ்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதன்மை விஞ்ஞானி வேல்விழி வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக, எம்.எஸ்.சாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன தலைவர் விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் பங்கேற்று, மாணவர்களிடம் கலந்துரையாடி, ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.நிகழ்ச்சியில் ஆராய்ச்சி நிறுவன செயல் இயக்குநர் ஹரிகரன், அண்ணாமலை பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மைய உதவி பேராசிரியர் கோபாலகிருஷ்ணன், திட்ட பணியாளர் ஹேமா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை