மேலும் செய்திகள்
திறனாய்வு திறமை போட்டி
06-Apr-2025
கடலுார்; சர்வதேச கூட்டுறவு ஆண்டை முன்னிட்டு, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், வணிகவியல் துறை மாணவ, மாணவிகளுடன் கூட்டுறவுத்துறையின் செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் கூடுதல் பதிவாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி, கூட்டுறவுத்துறையின செயல்பாடுகள் குறித்து வணிகவியல் துறை மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.கடலுார் மண்டல இணைப்பதிவாளர் இளஞ்செல்வி பங்கேற்று சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் வணிகவியல் துறைத்தலைவர் பத்மநாபன், பேராசிரியர் ராமு பங்கேற்று பேசினர். நிகழ்ச்சியில் வணிகவியல் துறை மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். சிதம்பரம் சரக துணைப்பதிவாளர் ரங்கநாதன், கூட்டுறவு சார்பதிவாளர்கள், சங்கப்பணியாளர்கள் பங்கேற்றனர். மேலும் பல்கலைக்கழக வளாகத்தில் பனை விதை நடும் நிகழ்ச்சி நடந்தது.கடலுார் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மற்றும் எம்.ஜி.ஆர்.,கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கடலுார் மண்டல இணைப்பதிவாளர், கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி, கல்வி நிதியாக ஒருகோடியே 3லட்ச ரூபாய்க்கான காசோலையை சென்னை கூடுதல் பதிவாளரிடம் வழங்கினார்.
06-Apr-2025